Vettri

Breaking News

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று!!




 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டத்தை (2025) ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க இன்று (17) முற்பகல் 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வரவு செலவுத்திட்ட விவாதம் நாளை (18) முதல் மார்ச் (21) வரை இடம்பெறவுள்ளது. அரசாங்கத்தின் இந்த முதலாவது வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அரசாங்க ஊழியர்கள் தமது சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்துள்ளனர். அரசாங்க ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வை வழங்குவதாக அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.இந்நிலையில், எந்தளவு அதிகரிப்புக்கள் வழங்கப்படும் என்பதை அறிவதில், இவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

அதேவேளை, வரி அதிகரிப்பு மற்றும் வரிக் குறைப்பு போன்றவை இந்த வரவு செலவுத் திட்டத்தில் பலராலும் பலராலும் எதிர்பார்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வர்த்தகத்துறை சார்ந்தவர்களே இவற்றை எதிர்பார்ப்பார்த்துள்ளனர்.

வடக்கு,கிழக்கு, மலையகம் என தேர்தலில் மாபெரும் வெற்றியை இந்த அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுத்த மக்கள்,தமது பிரதேச அபிவிருத்திகளுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் எவ்வாறான முன்மொழிவுகள் உள்ளன என்பதையும் எதிர்பார்த்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்ற சுற்றுலாத்துறை,விவசாயத்துறை,பெருந்தோட்டத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்களை அறிவதற்கும் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


No comments