Vettri

Breaking News

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்கள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்.




ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்மந்தமாக கலந்தாலோசிக்கும் விசேட கூட்டம் எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் சம்மாந்துறை விளையாட்டு கட்டிடத் தொகுதியில் நேற்று (10) இடம்பெற்றது. மேலும் இந் நிகழ்வில் கல்முனையின் முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும் ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பொருளாளர் மற்றும் அம்பாறை மாவட்ட உச்சபீட உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உள்ளூராட்ச்சிமன்ற உறுப்பினர்கள், தற்போது உள்ளூராட்ச்சிமன்ற தேர்தல் கேட்கும் வேட்பாளர்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் போன்றவர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments