வாகனங்களை ஏற்றிய கப்பல்கள் இந்த வாரம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைதரவுள்ளது!!
தாய்லாந்து மற்றும் ஜப்பானிலிருந்து வாகனங்களை ஏற்றிய கப்பல்கள் இந்த வாரம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மானேஜ் நேற்று (25) இதனைத் தெரிவித்தார்.ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இரட்டை கெப் வாகனங்களை ஏற்றிய ஒரு கப்பல் தாய்லாந்திலிருந்து இன்று (26) வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார். ஜப்பானில் பல்வேறு வாகனங்களை ஏற்றிய மற்றொரு கப்பல் நாளை (27) வரும் என்றும் அவர் தெரிவித்தார். வாகன விலைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், டபல் கெப் வாகனம் 24 மில்லியன் ரூபா முதல் 25.5 மில்லியன் ரூபாவாக இருக்குமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
No comments