Vettri

Breaking News

இராணுவத்தினரிடம் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க உத்தரவு!




 உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேஜர் பதவிக்கு கீழ் உள்ள சகல இராணுவ வீரர்களும் தமது கடவுச்சீட்டுக்களை அந்தந்த படைப்பிரிவு தலைமையகத்தில் ஒப்படைக்குமாறு இராணுவ தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் தமது கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள இராணுவ வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இதுவொரு முறைமையின் கீழ் செயற்படுத்தப்படும் என்றும் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் இராணுவ தலைமையக ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இராணுவ வீரர்களின் அமைதிகாக்கும் படைப் பிரிவின் பணிகள் மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளை விரைவு படுத்துவதற்கான திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார்.


No comments