பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்களுடன் கலந்துரையாடல்!!
பாறுக் ஷிஹான்
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஞாயிற்றுக்கிழமை ( 16 ) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் அம்பாறை நகரப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நேர்முகப்பரீட்சை ஒன்றினை மேற்கொண்டதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை எவ்வாறு முகம் கொடுப்பது, தேர்தலுக்கான வியூகம், அபேட்சகர்கள் தெரிவு ,உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டதாக அக்கட்சியின் கல்முனைத் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அமைப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றசாக் எமது செய்தியாளர் பாறுக் ஷஹானிடம் தெரிவித்தார்.
மேலும் குறித்த சந்திப்பில் சம்மாந்துறை தொகுp அமைப்பாளர் ஹசன் அலி உட்பட பொத்துவில் தொகுதி அமைப்பாளர் வெள்ளையன் வினோகாந் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments