Vettri

Breaking News

சம்மாந்துறையில் கல்விப் பணியாற்றிய ஆறு கல்வியியலாளர்களுக்கு மகத்தான சேவை நலன் பாராட்டு விழா!!!




( வி.ரி.சகாதேவராஜா)

 சம்மாந்துறை வலய கல்விசார் உத்தியோகத்தர்கள் நலன்புரி ஒன்றியம், வலயத்தில் நீண்ட காலம் கல்விச் சேவையாற்றிய ஆறு கல்வியியலாளர்களுக்கு நடாத்திய மகத்தான சேவை நலன்பாராட்டு விழா நேற்று(25) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பழத்தோட்ட விடுதியில்  சிறப்பாக நடைபெற்றது.

ஒன்றியத் தலைவர் எம்.எம்.எம்.ஜௌபர் தலைமையில் விழா இணைப்பாளர் எஸ் எல்.நிஷார் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக  கல்வி சேவையாற்றி ஓய்வு பெற்ற சம்மாந்துறை வலய  உதவிக் கல்விப் பணிப்பாளர்களான வி.ரி.சகாதேவராஜா, ஏஎல்ஏ.கபூர், மற்றும் ஆசிரிய ஆலோசகர்களான வைபி.யூசுப், இசட்.எம்.மன்சூர், எஸ்.எல்.அக்பர்,  எஸ்.சிறாஜுதீன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துமடல் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.

சம்மாந்துறை வலயத்தில் 26 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வெள்ளி விழாக் கண்ட ஒரே ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளரும் சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்கள் நலன்புரி ஒன்றிய தலைவருமான விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜாவிற்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.பரமதயாளன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார் . வாழ்த்து மடலை ஆசிரிய ஆலோசகர் இசட். எம்.றிஸ்வி யாத்து  வாசிக்க வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் அதனை வழங்கி கௌரவித்தார். கூடவே முறைசாரா கல்வி ஆசிரிய ஆலோசகர் ஏஎல் .அகமட்லெவ்வை சமூகமளித்திருந்தார்.

அதேபோல், ஓய்வு பெற்ற ஏஎல்ஏ.கபூர் வைபி.யூசுப், இசட்.எம்.மன்சூர், எஸ்.எல்.அக்பர்,  எஸ்.சிறாஜுதீன் ஆகியோரும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துமடல் வழங்கி பாராட்டப்பட்டனர்.

விழாவில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செபமாலை மகேந்திரகுமார் கலந்து சிறப்பித்தார்.

மேலும், விழாவில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம் .வை.அரபாத் முகைடீன் ,எச்.நைரூஸ்கான், பி.பரமதயாளன், வலயக்கணக்காளர் சீ.திருப்பிரகாசம், ஆசிரியவள நிலைய முகாமையாளர்  எஸ்.சிவேந்திரன், முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எல்.மஜீத், என்.எம்.நௌசாட் மற்றும் கல்விசார் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பாராட்டுப் பெற்ற அதிதிகளின் உரைகளும் ஏனையோரின் வாழ்த்துரைகளும் கவிதை வாசிப்பும் இடம்பெற்றன.

 வலயக்கல்விப் பணிமனை கல்விசார் உத்தியோகத்தர்கள் சார்பில் ஆசிரிய ஆலோசகரும் வரிப்பத்தான்சேனை அரபிக் கல்லூரி தலைவருமான அஷ்ஷேக் ஏ. எம் .கியாஸ் மௌலவி நன்றியுரையாற்றினார்.

இசட் எம்.மன்சூரின் நாட்டார் பாடலும், ஆசிரிய ஆலோசகர் எம்.ஷவாஹிரின் பாடலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இறுதியில் விருந்துபசாரம் நடைபெற்றது.










No comments