நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!!
பாறுக் ஷிஹான்
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ் பணிபுரிகின்ற அம்பாரை மாவட்ட தமிழ் மொழிமூல அனைத்து போதனாசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ரி.வினோதராசாவின் அடக்குமுறை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் முன்றலில் திங்கட்கிழமை(17) இன்று மேற்கொண்டார்.
இதன் போது பிரதிப் பணிப்பாளர் ரி. வினோதராசாவின் நிருவாக முறைமையில் அதிருப்தி அடைந்த சகல உத்தியோகத்தர்களும் அவரை உடனடியாக இடம் மாற்றக் கோரி இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை ஒருங்கிணைந்த சுதந்திர தொழிற்சங்க செயலாளர் நிஹால் விதானகேவின் வழிகாட்டுதலில் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

No comments