Vettri

மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கும் மாணவத் தலைவர்களும் பல்கலைக்கழகத்தில் தலைமைத்துவ பயிற்சி பட்டறை !



நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகளும் மாணவத் தலைவர்களும் கலந்து கொண்ட தலைமைத்துவப் பயிற்சி பட்டறை இன்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் வளவாளர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம்.எம். ரிபாயுதீன், சமூகவியல் துறைப் பேராசிரியர் எஸ்.எம் அய்யூப் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான தலைமைத்துவ ஆளுமை விருத்தி தொடர்பாக விரிவுரையாற்றினர். இந்நிகழ்வில் பல்கலைக்கழக நூலக  வசதிகள் தொடர்பாக சி.எம்.ஏ. முனாஸ் அவர்களினால் தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை பணிப்பாளர்  ஐ.எம்.கடாபி அவர்களினால் பல்கலைக்கழகத்தினுள் நடைமுறைப்படுத்தப்படும் விளையாட்டுத்துறை தொடர்பான  விளக்கங்களும்  வழங்கப்பட்டது.






No comments