எரிபொருள் விலையில் மாற்றம்!!
இன்று நள்ளிரவு முதல் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, லங்கா சுப்பர் டீசலின் விலை 18 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 331 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
அதன்படி, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 183 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது
No comments