Vettri

Breaking News

9ஏ பெற்ற மாணவர்களுக்கு " நாளைய மின்னும் தாரகைகள்" சான்றிதழ்கள்!




 9ஏ பெற்ற மாணவர்களுக்கு " நாளைய மின்னும் தாரகைகள்" சான்றிதழ்கள்!

கல்முனை பற்றிமாவில் ஊக்குவிப்பு யுக்தி!
( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாண மட்ட மூன்றாம் தவணை கபொத.சாதாரண தரப் பரீட்சையில் "09A" பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களுக்கு நாளைய மின்னும் தாரகைகள் " Shining Stars of Tomorrow” சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெற இருக்கும் க.பொ.த சாதாரண  தரப் பரீட்சையில் தோற்ற இருக்கும் (2024ஆம் வருடம்) மாணவர்களுக்கும், பெற்றோருக்குமான கூட்டம் நேற்று முன்தினம் (11) செவ்வாய்க்கிழமை கல்லூரியில் இடம்பெற்றபோது மேற்படி சான்றிதழ் வழங்கப்பட்டது.

கல்லூரியின் அதிபர் அருட்.சகோ.எஸ்.இ.றெஐினோல்ட் தலைமையில் நடைபெற்ற பெற்றோர் மாணவர் கூட்டத்தில் இப்புதிய யுக்தி கையாளப்பட்டது.

மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பில் பெற்றோர்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த மூன்றாந்தவணைப்பரீட்சையின் பெறுபேற்று அட்டைகளும் மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் விசேடமாக   "09A" பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களுக்கு " Shining Stars of Tomorrow” சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெண்கள் பிரிவின் பிரதி அதிபர் Rev.Sr.M.பிரியசாந்தி AC அவர்களுடன் தரம் 11க்கான பகுதித்தலைவர்கள், வகுப்பாசிரியர்கள் மற்றும் பாடஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.







No comments