Vettri

Breaking News

முன்னாள் சபாநாயகருக்கு 9 மாதங்களில் 9 வாகனங்கள் ; எரிபொருளுக்காக 33 இலட்சம் ரூபாய் செலவு!!




 முன்னாள் சபாநாயகர் 2024 ஆம் ஆண்டின் முதல்  ஒன்பது  மாதங்களில் மட்டும்  ஒன்பது வாகனங்களை பயன்படுத்தியுள்ளதுடன் அவற்றின் எரிபொருளுக்காக 33 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளதாக,  சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.முன்னாள் சபாநாயகர்கள் உட்பட பல அதிகாரிகள் தங்கள் பதவிக் காலத்தில் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் எரிபொருள் தொடர்பான பல செலவு அறிக்கைகளை, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நேற்று  சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டு நவம்பர் வரை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 70 ஊழியர்கள் கடமை புரிந்துள்ளனர்.2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 24 ஆம் திகதி வரை, முன்னாள் சபாநாயகர் 09 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார். அந்த 09 மாத காலத்தில் மாத்திரம் எரிபொருளுக்காக 3.34 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன்  முன்னாள் பிரதி சபாநாயகர்  06 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதுடன் 09 மாதங்களுக்கு 135 இலட்சம் ரூபாவை எரிபொருளுக்காக செலவிட்டுள்ளார். முன்னாள் பிரதிக் குழுக்களின் தலைவர் 04 வாகனங்களைப் பயன்படுத்தியதுடன் 72 இலட்சம் ரூபாவை எரிபொருளுக்காக செலவிட்டுள்ளார் என்றும் மேலும் தெரிவித்தார்.


No comments