Vettri

Breaking News

தேசபந்து உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய உத்தரவு!!




 2023 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் அதிகாரிகள் 8 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் சந்தேக நபர்களாக பெயரிடுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளின் குழு ஒன்று, 'ஹரக் கட்டா'வின் சகாக்கள் குழு ஒன்றை கைது செய்வதற்காக மாத்தறை வெலிகம பிரதேசத்திற்கு சென்றிருந்தது.

அப்போது, வெலிகமவில் அமைந்துள்ள W 15 ஹோட்டல் பகுதியில் இருந்து சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அந்த திசையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments