Vettri

Breaking News

8 இலட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!!




பாறுக் ஷிஹான்

சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட 8 இலட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள்   கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (15) அதிகாலை 2.30 மணியளவில் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடையாளம் காணப்பட்ட போதைப் பொருள் விற்பனை மற்றும்  போதைப் பொருள் பாவனை செய்பவர்களின்  வீடுகள்   கல்முனை பிராந்திய  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் பணிப்புரைக்கமைய விசேட தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதன் போது ஐஸ் போதைப் பொருள் , இலத்திரனியல் தராசு  , 893840 ரூபா பணத்துடன் , 29 வயது மதிக்கத்தக்க பெண் , 22 வயது மதிக்கத்தக்க   ஆண்  சந்தேக நபர்கள் கைதாகினர்.

இச்சோதனை நடவடிக்கையில்  கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை ,பெரிய நீலாவணை,  சாய்ந்தமருது , காரைதீவு,  பொலிஸ் நிலையங்களில் கடமை புரியும் பொலிஸார் மற்றும்  இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர்   செய்யப்பட்டது.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments