அம்பாறை மாவட்ட 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்ட 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை(4) விமர்சையாக நடைபெற்றன.
அரச தனியார் நிறுவனங்கள் வர்த்தக நிலையங்கள் வாகனங்களில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இதன் அடிப்படையில் கல்முனை சம்மாந்துறை சாய்ந்தமருது காரைதீவு நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மேலும் பொலிஸ் நிலையங்கள் வங்கிகள் பிரதேச செயலகங்கள் பொது இடங்களில் தேசிய சுதந்திர தின வைபவங்கள் நடைபெற்றன.சில இடங்களில் வாகன ஊர்வலங்களும் இடம்பெற்றதுடன் பொலிஸார் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.
No comments