Vettri

Breaking News

65 வருட கால வரலாற்றில் முதல் தடவையாக காரைதீவு கண்ணகியில் இல்ல விளையாட்டுப் போட்டி!




 ( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய 65 வருட கால வரலாற்றில், முதல் தடவையாக  இல்ல விளையாட்டுப் போட்டி மிக விரைவில் நடைபெறவிருக்கிறது.


அதனையொட்டி, விளையாட்டுக் கொடிகளை வெளியிடும்  கால்கோள் விழா இன்று (25) செவ்வாய்க்கிழமை காலை பாடசாலை அதிபர் சீனித்தம்பி திருக்குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பிரதம அதிதியாக, ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி வருகைதரு விரிவுரையாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.

முதலில், பாடசாலை கொடி அதிபரிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் இல்லங்களுக்கான கொடிகள் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டன.

விவேகானந்த இல்லம், விபுலானந்தா இல்லம் ஆகிய இரு இல்லங்கள் உருவாக்கப்பட்டு அதற்கான பயிற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இல்ல ஆசிரியர்கள் இல்லத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.











No comments