Vettri

Breaking News

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் திடீர் சோதனை; 5உணவு நிலையங்களுக்கெதிராக வழக்குத்தாக்கல்!!




 கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட   இப்  பாரிய உணவுப் பரிசோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் முதலானவை இன்று 2025.02.25  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இந்த பரிசோதனையில் கலந்து கொண்டனர் 

இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு பண்டங்கள் மற்றும் பொருட்களை சுகாதாரத்துக்கு முறைகேடான வகையில் தயாரித்து  வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்கள் முதலானவை சுற்றி வளைக்கப்பட்டு பாவனைக்கு உதவாத பொருட்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டதுடன் அதில்    5  உணவு நிலையங்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கான தகவல்கள் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









No comments