Vettri

Breaking News

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 5 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு!!




பாறுக் ஷிஹான்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் விசேட குழந்தைகள் பராமரிப்பு பிரிவுக்கு சுமார் 5 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த மருத்துவ உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை  (17) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்  பீ.பிரபாசங்கர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன்   பிரதம அதிதியாக கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்களை கையளித்தார்.

இதன்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சிறுவர் நோயியல் வைத்திய நிபுணர் டொக்டர் பீ.எம்.அர்ஷாத் அஹமட்,  பிராந்திய உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம் உள்ளிட்ட வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




No comments