Vettri

Breaking News

கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பியோடிய 4கைதிகள்!!




 பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பியோடிய கைதிகள் நால்வரில் இருவரை சோமவத்திய காட்டுப்பகுதியில் வைத்து வெலிகந்த பொலிஸார் இன்று (25) பகல் கைதுசெய்துள்ளனர்.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைத்திருந்த கைதிகள் 4 பேர் இன்று அதிகாலை வேளையில் தப்பிச் சென்றுள்ளதாக வெலிகந்த பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து வெலிகந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து கூட்டாக மேற்கொண்ட தேடுதலின்போதே தப்பியோடிய நால்வரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

29 – 34 வயதிற்கும் இடைப்பட்ட காலி போத்தல மற்றும் அக்மீமன, முல்லைத்தீவு பகுதிகளை வசிப்பிடமாக கொண்ட நால்வரே இவ்வாறு தப்பியோடியுள்ளனர் என்பது மேலும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் முல்லைத்தீவு, காலி பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை வலயத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதுடன் அடுத்த இரு கைதிகளையும் கைது செய்வதற்காக வேண்டி தொடர்ந்தும் இராணுவத்தினரும், வெலிகந்த பொலிஸாரும் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க  மேலும் தெரிவித்தார்.


No comments