இந்த ஆண்டின் இதுவரையில் 428,197 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை!!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 428,197 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 பேர் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர்.
பெப்ரவரி மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 175,436 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் இந்தியாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளனர்.
இதன்படி, இந்தியாவிலிருந்து 25,293 பேரும், ரஷ்யாவிலிருந்து 22,280 பேரும் பிரித்தானியாவிலிருந்து 18,785 பேரும், ஜேர்மனியிலிருந்து 12,393 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது
No comments