3 கொள்ளை சந்தேக நபர்கள் களவாடப்பட்ட பொருட்களும் மீட்பு!!
பாறுக் ஷிஹான்
இரு வேறு கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் களவாடப்பட்ட பொருட்களும் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுளளன.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையடிக்கிராமம் 01 பகுதியில் கடந்த பெப்ரவரி 03 ம் திகதி அன்று வீடு உடைக்கப்பட்டு தொலைபேசி உட்பட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் குழு புலனாய்வு மற்றும் தேடுதல் மேற்கொண்டு 2 பேர் ஆரம்பத்தில் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைதான வீரமுனை மற்றும் மலையடிக் கிராமம் பகுதிகளை சேர்ந்த 2 சந்தேக நபர்கள் வசம் இருந்து இரண்டு தொலைபேசிகளை பொலிஸார் மீட்டனர். அத்துடன் கடந்த ஜனவரி 26 ஆந் திகதி மையவாடி பகுதியில் வயதான பெண்மணியின் வீட்டில் உள்நுழைந்து நகை மற்றும் கையடக்க தொலைபேசிகளை கைதான சந்தேக நபர்கள் தொடர்புள்ளமை பொலிஸாரின் மேலதிக விசாரணையின் போது வெளியாகியுள்ளது.
அத்துடன் சந்தேக நபர்கள் இருவர் திருட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டதாக தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட வயதான பெண்ணும் செவ்வாய்க்கிழமை (04) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தனது வீட்டில் கடந்த ஜனவரி 26 ஆந் திகதி இரவு வேளையில் நகை மற்றும் கையடக்க தொலைபேசிகள் திருடிச் செல்லப்பட்டிருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து மேற்குறித்த 2 சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் போது மற்றுமொரு சந்தேக நபரான பாண்டிருப்பு 02 பகுதியைச் சேர்ந்தவர் கைதானார். அத்துடன் சந்தேக நபர்கள் வசம் கொள்ளையடித்த நகைகளையும் மீட்ட சம்மாந்துறை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments