Vettri

Breaking News

2 பவுண் தங்க நகை மற்றும் போதைப் பொருளுடன் திருட்டு சந்தேக நபர் கைது!!!




 பாறுக் ஷிஹான்


வீடு  உடைக்கப்பட்டு  2 பவுண் நகை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 28 வயது சந்தேக நபரை போதைப்பொருளுடன்  சம்மாந்துறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  புற நகர் பகுதி  வீடு ஒன்று உடைக்கப்பட்டு   2 பவுண் தங்க நகை  மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக  கடந்த திங்கட்கிழமை (11)  சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வீட்டு உரிமையாளர் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில்  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் ஆலோசனைக்கமைய   பொலிஸ் நிலைய பெருங் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸார்  நடவடிக்கை மேற்கொண்டு   சம்மாந்துறை 03   நெசவாலை வீதி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபரை  கைது செய்ததுடன்  சந்தேக நபரிடம் இருந்து 3 கிராம் 20 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் உட்பட வீடு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட 2 பவுண் நகை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் ஏற்கனவே போதைப்பொருளுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங் குற்றப் பிரிவினரால் கைதான சந்தேக நபரிடம்  மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையை  தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை(11)   வீடு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தெரிய வந்தள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும்  சந்தேக நபர் உட்பட  சான்றுப் பொருட்கள் யாவும்  சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை  மேற்கொண்டு வருகின்றனர்.




No comments