இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் 28 வது வருடாந்த விருது வழங்கும் விழா!!
நூருல் ஹுதா உமர்
இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் 28 வது வருடாந்த விருது வழங்கும் விழா அச்சங்கத்தின் அம்பாறை, கல்முனை கிளையின் தலைவர் எம்.பி.எம்.ஹசீர் தலைமையில் வெள்ளிக்கிழமை (21) அம்பாறை மிண்டாடா ஹோட்டலில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம பிரதம அதிதியாகவும், இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் டரிட்டன் போல் கௌரவ அதிதியாகவும், அம்பாறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் அசல ஹேரத் விசேட அதிதியாகவும், பொறியியலாளர்கள் மற்றும் தேசிய கட்டுமான சங்கத்தின் முக்கியஸ்தர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
தேசிய கட்டுமான சங்கத்தின் பிராந்திய தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறந்த முறையில் கட்டுமான பணிகளை முன்னெடுத்த நிறுவனங்களுக்கு கட்டுமான சிறப்பு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் தேசிய கட்டுமான சங்கத்தின் அம்பாறை, கல்முனை கிளையின் தலைவர்களாக செயற்பட்டு சங்கத்தினை சிறப்பாக வழிநடாத்தியமைக்காக அதன் முன்னாள் தலைவர்களான ஐ.எல்.எம்.மிஜ்வாத், கே.எம்.சக்கரியா ஆகியோர் இந்த நிகழ்வில் விசேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் நிர்மாணத் துறையில் நேர்த்தியாகவும், சிறந்த முறையிலும் பணிகளை முன்னெடுத்த நிறுவனங்கள், ஒப்பந்தக்காரர்கள் என பலர் இதன்போது சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments