கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் 2025 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு நிறைவு.!
(ஏ.எஸ்.எம்.அர்ஹம்)
கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் 2025 ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று 16.02.2025 ஞாயிற்றுக் கிழமை மயோன் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கொழும்பிலிருந்து வந்து கலந்துகொண்ட Y.W.M.A. பேரவையின் தலைவி சகோதரி பவாஸா தாஹா அவர்களும், கனடாவிலிருந்து வந்து கலந்து கொண்ட C.S.M.W.A. பேரவையின் தலைவி சீனியா தாஸிம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வானது கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இதன்போது கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகளில் தேர்நதெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான சான்றிதழ்கறும், பதக்கங்களும், நினைவுச் சின்னங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதிகளும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் ரஹ்மத் பவுண்டேசனோடு இணைந்து பல வருடகாலமாக சமூக சேவைகளில் அர்பணிப்புடன் செயலாற்றி வந்தவர்களுக்கான நினைவுச்சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
மேலும் இதன்போது அதிதிகளுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழவில் மேலும் அண்மையில் ரஹ்மத் பவுண்டேசன் மூலம் மேற்கொண்ட இரத்த தானத்தில் கலந்துகொண்ட இரத்த கொடையாளர்களையும் பாராட்டும் விதமாக பவுண்டேசன் மூலம் சான்றிதழ்கழும் வழங்கி வைக்கப்பட்டன்.
மேலும் இந்நிகழ்வின் ஓர் அங்கமாக வலது குறைந்தவருக்காக இரு சக்கர நாற்காலி ஒன்றும் வழங்கிவைப்பட்டிருந்தது.
No comments