Vettri

Breaking News

இலவச மருத்துவ முகாம் - 2025 ;இலவச மூக்குக்கண்ணாடிகள் மற்றும் கண் வில்லைகள் வழங்கும் நிகழ்வு!!




ஏ.எஸ்.எம்.அர்ஹம் 

நிருபர் 

கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில், Y.W.M.A பேரவை மற்றும் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பங்களிப்புடன் இலவச மருத்துவ முகாம் (இலவச மூக்குக்கண்ணாடிகள் மற்றும் கண் வில்லைகள் வழங்கும் நிகழ்வு) 2025.02.15 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9:00 மணியளவில் கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகரும், முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான கெளரவ. ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் காரியாலைய வளாகத்தில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கொழும்பிலிருந்து  வருகை தந்த Y.W.M.A. பேரவையின் தலைவி சகோதரி பவாஸா தாஹா, கனடாவிலுருந்து வருகை தந்த சகோதரி சீனியா தாஸிம் அவர்களும்,

கெளரவ அதிதிகளான கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்ஸின் பக்கீர், கல்முனை ஆதார வைத்தியசாலை கண் சத்திர சிகிச்சை நிபுணர் சிறீஸன், அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கண் பிரிவுக்குப் பொறுப்பான வைத்தியர் உவைஸ், ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் Dr. சனா, ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முகாமையாளர் றிஷாட் வஹாப், ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதிமார்கள், கண்ணியத்திற்குரிய உலமாக்கள், பயனாளிகள் என பலர் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர். 












No comments