கல்முனையில் களைகட்டிய பற்றிமாவின் 125 வது ஆண்டு பெருவிழா சாரணர் பவனி!!
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின்
125ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்குமுகமாக பெருவிழா சாரணர் பவனி நேற்று முன்தினம் கல்முனை நகரில் கோலாகலமாக நடைபெற்றது.
அதேவேளை, அங்கு நடைபெற்று வந்த மூன்று நாள் சாரணர் பயிற்சி முகாமின் இறுதி நாள் நிகழ்வுக்கு அணி சேர்த்தால் போல் இப் பவனி சிறப்பாக இடம்பெற்றது.
மேலும், கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாகவும் இது முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது பாடசாலையின் அதிபர் அருட்.சகோ. எஸ்.இ.றெஜினோல்ட் FSC தலைமையில் Jubilee Scout Rallyயுடன் ஆரம்பிக்கப்பட்டது.
No comments