பஸ் வண்டியிலுள்ள பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 123 துப்பாக்கி ரவைகள்!!
பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 123 துப்பாக்கி ரவைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பஸ் வண்டிக்குள்ளிருந்து ஆயுதங்களிருந்த இந்தப் பயணப்பை மீட்கப்பட்டது.
பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், பொலிஸார் இந்தப் பையை மீட்டெடுத்தனர்.பஸ் வண்டிக்குள் பயணப் பையில் காணப்பட்ட சிறு இரும்புப் பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸார் இதனை மீட்டுள்ளனர்.
இந்தப் பைக்குள் 113 பிஸ்டல் ரக துப்பாக்கி ரவைகள், ரி56 ரக துப்பாக்கி ரவைகள் ஒன்பது, எல். எம். ஜி. துப்பாக்கி ரவைகளும் காணப்பட்டன. சந்தேக நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments