இலங்கையில் ஆண்டுதோறும் 1000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் புற்றுநோயால் பாதிப்பு!!
சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, இந்த நாட்டில் ஆண்டுதோறும் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்களில் 30% பேருக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பதாகவும், 25% பேருக்கு மத்திய நரம்பு மண்டலம் தொடர்பான புற்றுநோய் இருப்பதாகவும் மஹரகம வைத்தியசாலையின் இரத்த புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் புத்திக சோமவர்தன தெரிவித்தார்.
இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 புற்றுநோயாளிகள் பதிவாகுவதாகவும் அவர்களில் 4,000 பேர் இரத்த புற்றுநோயாளிகள் எனவும் அவர் குறிப்பிட்டார்
No comments