Vettri

Breaking News

ரமழான் தலைப்பிறை தென்படவில்லை; மார்ச் 02 முதல் நோன்பு!!






இலங்கையின் எப்பாகத்திலும் புனித ரமழான் மாத ஆரம்பத்திற்கான தலைப்பிறை இன்றையதினம் (28) தென்படாததால் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலை முதல் நோன்பு நோற்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (28) மாலை மஃரிப் தொழுகையை அடுத்து, கூடிய பிறைக்குழு மாநாட்டில் இம்முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1446 இற்கான புனித ரமழான் மாத தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாததன் காரணமாக, ஷஃபான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து, புனித ரமழான் முதலாவது நோன்பை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மார்ச 02ஆம் திகதி ஆரம்பிக்க இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உள்ளிட்ட பிறைக்குழுவினர் உத்தியோகபூர்வமாக இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

No comments