Vettri

Breaking News

சாராயத்தவறணை வேண்டாம்! கல்முனையில் விளக்குமாற்றுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள்!!




 ( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை பெரிய நீலாவணையில் மற்றுமொரு சாராயத்தவறணை வேண்டாம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் விளக்கு மாற்றுடன் இன்று செவ்வாய்க்கிழமை கல்முனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் பெரிய நீலாவணை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

 ஆர்ப்பாட்டக்காரர்கள் விளக்குமாறு மற்றும் பதாதைகளுடன் காணப்பட்டார்கள் .

கடந்த பத்தாம் மாதம் இரண்டாவது தவறணை திறக்கப்பட்டதும் ஆர்ப்பாட்டம் நடத்திய பொழுது அதனை மூடினார்கள்.

 ஆனால் இப்பொழுது மீண்டும் திறப்பதற்கு ஏற்பாடு நடைபெறுகிறது.

 எங்களுக்கு இந்த சாராயத்தவறனை வேண்டாம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

 ஒரு மகஜர் பிரதேச செயலாளரிடம் வழங்கப்பட்டது.









No comments