Vettri

Breaking News

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு !!





 செ.துஜியந்தன் 

தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ் புதியவருடத்தில் அரச ஊழியர்கள்  உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இங்கு வலயக் கல்விப் பணிப்பாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக உயிர்நீத்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு அதன் பின் தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளும் உறுதி மொழியை அனைத்து அரச ஊழியர்களும் உத்தியோகபூர்வமாக வாசித்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.  அத்துடன் உத்தியோகத்தர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் தெரிவித்து பாற்சோறு,  இனிப்புக்கள் பகிர்ந்து புதியவருடத்தினை வரவேற்றனர். இங்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரனின் சிறப்புரை, ஊழியர்களின் பல்வேறு ஆற்றுகைகள் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.

No comments