Vettri

Breaking News

மறைந்த முன்னாள் தமிழரசுத் தலைவர் மாவைக்கு அம்பாறையில் இதய அஞ்சலி!!




 இன்று அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தனது 83 ஆவது வயதில் உயிர் நீத்த மறைந்த முன்னாள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சோமசுந்தரம் சேனாதிராஜா( மாவை சேனாதிராஜா) அவர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று (30) மாலை 4 மணியளவில் காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வானது இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேசக்கிளை தலைவர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் அஞ்சலி நிகழ்வுக்கு காரைதீவுக்கிளையின் உபதலைவர் தட்சணாமூர்த்தி அவர்களும் ,முன்னாள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கோபிகாந்த் அவர்களும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் , கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும்  அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்





No comments