அம்பாறைத் தமிழ் மக்களை நேசித்த மாமனிதர் மாவை! முழுத் தமிழினத்திற்கே பேரிழப்பு என்கிறார் ஜெயசிறில்!!!
( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தையும், அம்பாறை தமிழர்களையும் நேசித்த ஒரு பெரும் தலைவர். இலங்கை தமிழரசு கட்சியின் இருக்கக்கூடிய அம்பாறை மாவட்டத்தை நன்கு தெரிந்த துணிச்சல் மிக்க பேச்சாளர் .எனது அரசியல் பாதையிலே என்னை இந்த நிலைக்கு உயர செய்ய வைத்த அரசியல் ஆசான். என்றும் மறக்க முடியாத மாமனிதன். உங்களுடைய இழப்பு வடகிழக்கு தமிழர்களுக்கு மாத்திரமல்ல உலகத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு பேரிழப்பாக கருதுகிறேன்.
இவ்வாறு காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தனது அனுதாபச் செய்தியில் கூறியுள்ளார்.
அதில் மேலும் கூறுகையில்..
இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழ் தேசியப் பாதையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் இருந்து ஜனநாயக ரீதியாக எமது மக்களுக்காக தன்னால் இயன்ற செயல்பாடுகளை இளவயதிலிருந்து பல சிறைவசம் சென்று தலையில் பட்ட அடியின் வேதனையை ஒவ்வொரு பிரச்சார மேடையிலும் கூறிக் கொள்வார் .
அந்த அடியின் தாக்கமே இன்று அவர் உயிரே பிரிய காரணம்.
உங்களைப் போன்று ஒரு பொதுநலம் உள்ள ஒரு தலைவரை இனி இலங்கை தமிழரசு கட்சியில் காண முடியுமா? பதவிக்காக பறக்கின்றவர்கள் மத்தியில் தமிழ் இனத்திற்காக உங்கள் வாழ்நாள் அனைத்தையும் அர்ப்பணித்த பெருந்தலைவர் சம்மந்தர் ஐயா வழியிலே பயணித்த நீங்கள் இன்று அவரிடத்திலே சென்று விட்டீர்கள் உலகத்தில் தமிழ் தேசிய வாதிகளை உலுக்கிய மிகப்பெரும் துக்க நாளாக கருத முடிகின்றது .
பிறந்தவர் இறந்தே ஆக வேண்டும் இது எப்படி இருந்தாலும் எமது இனத்தின் விடுதலைக்காய் உங்கள் வாழ்நாள் செயல்பாடை மறக்க முடியாது மனம் வருந்துகின்றோம்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய மாவை சேனாதிராஜா ஐயா அவர்கள் சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்தார் ஆழ்ந்த கவலை.ஆழ்ந்த அனுதாபம் .ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன் ஓம் சாந்தி ஓம்
No comments