சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வருடாந்த ஒன்று கூடலும், கௌரவிப்பும் !
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்றது.சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், தாய் சேய் நல பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்வின் மற்றும் தொற்றா நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் இர்ஷாத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கான புதிய பெயர் பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. அத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கான கர்ப்ப பதிவு ஆவணம் (Pregnancy Record File) வழங்கப்பட்டது. இதன்போது பிரதேச சுகாதார மேம்பாட்டுக்காக உழைத்த உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவித்து நினைவுச் சின்னங்கள், பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments