பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் விடயம் ஆராயப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் : ஐக்கிய காங்கிரஸ்!!!
நூருல் ஹுதா உமர்
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் இந்தியா செல்லும் போது இலங்கை விமான நிலையத்தில் வைத்து அவரை வெளிநாட்டுக்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டதாகவும் அவர் வெளிநாடு செல்ல தடை உண்டு என விமான நிலைய அதிகாரிகள் சொன்னதாகவும் சிவஞானம் ஸ்ரீதரன் எம்.பி பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார். இது பாரதூரமான குற்றச்சாட்டாகும். இவ்வாறு நாம் ஆதரவளித்த தேசிய மக்கள் சக்தி அரசில் நடந்திருப்பது கவலை தரும் விடயமாகும் என ஐக்கிய காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஐக்கிய காங்கிரஸ் சார்பில் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டு ஊடக அறிக்கையில் இது பற்றி அரசு கட்டாயம் விசாரிக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வெளிநாடு போக முடியாது என நீதிமன்றம் தடைவிதித்ததா? இல்லையாயின் தடை உள்ளது என சொல்ல விமான நிலைய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதா போன்ற விடயங்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு, அதை பொது மக்களுக்கு தெரிவிப்பதோடு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
No comments