Vettri

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி புண்ணியமூர்த்திக்கு பிரியாவிடை!












( வி.ரி. சகாதேவராஜா)

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற்
கல்லூரியின் 05 வது பீடாதிபதியான சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி தனது 60 வது வயதில் ஓய்வு பெறுவதையொட்டி கல்லூரியில் சேவை நலன் பாராட்டு விழாவும் பிரியாவிடை நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.

கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட நியமன கடிதத்தின் பிரகாரம் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 06 வது புதிய பீடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.சி. ஜூனையிட் தலைமையில் நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்றது.
பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்திக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

உப பீடாதிபதிகள் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் முன்னிலையில் இவ் வைபவம் முகிழ்நிலை மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

அவரது சேவைகள் பற்றி பலரும் உரையாற்றினார்கள். நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

No comments