Vettri

Breaking News

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை!!




பாறுக் ஷிஹான்

 ஐஸ் போதைப்பொருள் தம் வசம் வைத்திருந்த இளைஞனை கைது செய்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம்இ சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் பாடசாலைக்கு அருகாமையில்  திங்கட்கிழமை (13) இரவு    இரகசியத்தகவலின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 18 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன்  சந்தேக நபர் உள்ளிட்ட சான்றும் பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மேலும்  குறித்த சோதனை நடவடிக்கையானது  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பிரிவு பொறுப்பதிகாரி ஏ. நஸார்  தலைமையிலான பொலிஸார்  ஈடுபட்டிருந்தனர் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments