கற்கைநெறி மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு; எம்பிக்களான ஆதம்பாவா மஞ்சுள பங்கேற்பு!
( வி.ரி. சகாதேவராஜா)
சாய்ந்தமருது தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் கற்கை நெறியினை ஆரம்பிக்கும் மாணவர்களினை உள்ளீர்க்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (01.01.2025) சாய்ந்தமருது தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ. ஆதம்பாவா மற்றும் மஞ்சுள ரத்னாயாக்க ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எ.எல்.எம்.ஆசிக் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் இளைஞர் சேவை மன்ற பணிப்பாளர்கள்,உத்தியோகத்தர்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
No comments