Vettri

Breaking News

கிளீன்_சிறீ_லங்கா நிகழ்ச்சித் திட்டம் இன்று ஏறாவூர் நகர சபையில் ஆரம்பம்!!!













கிளீன்_சிறீ_லங்கா நிகழ்ச்சித் திட்டம் இன்று ஏறாவூர் நகர சபையில் ஆரம்பம் 


எம்.எஸ். றசீன்


மலர்ந்துள்ள புதிய ஆண்டில் தேசிய மட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் *கிளீன் சிறீ லங்கா*" நிகழ்ச்சித் திட்டம் இன்று புதன்கிழமை  காலை ஏறாவூர் நகர சபையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நகர சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


கடந்த ஆண்டு ஏறாவூர் நகர சபை தேசிய மட்டத்தில் பல் வேறு சாதனைகளை நிலை நாட்டுவதற்கு காரணமாக செயற்பட்ட உத்தியோகத்தர்களுக்கு நன்றி தெரிவித்த செயலாளர், புதிய ஆண்டிலும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் நகர சபையின் செயற்பாடுகளில் மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் விதத்திலும் செயற்படுமாறு உத்தியோகத்தர்களிடம் வேண்டு கோள் விடுத்தார். 


குறிப்பாக திண்மக் கழிவு முகாமைத்துவம் உட்பட சபையினால் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தாமதமின்றி கிடைப்பதற்கும் தகவல் தொழில்நுட்ப விடயங்களை உள்வாங்கி செயற்படுவதற்கும் அனைத்து உத்தியோகத்தர்களும் தயாராக வேண்டும் எனவும் உத்தியோகத்தர்களை கேட்டுக் கொண்டார்.


No comments