Vettri

Breaking News

பட்டிருப்பில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கான கணிதபாட செயலமர்வு!!






செ.துஜியந்தன்

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் ஆரம்பபிரிவில்  கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கணிதபாட செயலமர்வு  ஆசிரியர் மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்றது.

வலயக்கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரனின் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் ஆரம்பப்பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
இங்கு ஆரம்பத்தில் இருந்தே மாணவர்கள் மத்தியில் கணிதப்பாடத்தில்  ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இலகுவான கற்பித்தல் நுட்பங்கள் பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சியுடன் கூடிய செயலமர்வு நடைபெற்றது. இச்செயலமர்வில் பிரதான வளவாளராக அம்பாறை தெஹியத்த கண்டி கலை கம வித்தியாலய அதிபர் சமன்பிரியதர்சன் கலந்து கொண்டார். அத்துடன் உதவிக்கல்விப்பணிப்பாளர் சத்தியதாஸ், ஆசிரிய ஆலோசகர் சண்முகநாதன் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.
தரம் ஒன்று தொடக்கம் இலகுவான கற்பித்தல், காட்சிப்படுத்தல், செயல்முறை விளக்கம் மூலமாக மாணவர்களுக்கு கணிதபாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மகிழ்ச்சியான கற்றலுக்கு மாணவர்களை தயார்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

No comments