Vettri

Breaking News

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த ஒன்று கூடலும் சேவை நலன் பாராட்டும் !




நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த ஒன்று கூடலும் சேவை நலன் பாராட்டு நிகழ்வும் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் கல்முனை சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய பிரிவுத் தலைவர்கள் பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நீண்டகாலமாக பணியாற்றி வருடாந்த இடமாற்றம் பெற்று சென்ற பலர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.





No comments