இன்றைய வானிலை!!
வடக்கு , கிழக்கு, வடமத்திய , தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
No comments