முதல் முறையாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தைப்பொங்கல் விழா!!!
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்க தலைவர் சி.எம். அஹமட் முனாஸ் தலைமையில் 16.01 .2025 அன்று காலை 9.30 மணியளவில் தென் கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க காரியாலயத்தில் தைப்பொங்கல் விழா இடம்பெற்றது.
பல்கலைக்கழக இந்து ஊழியர்கள் மற்றும் ஏனைய சமயங்களைச் சார்ந்த ஊழியர்கள் பங்குகொண்டிருந்த இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் மற்றும் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா மற்றும் நூலகர் எம்.எம். றிபாவுடீன் ஆகியோரும் பங்குகொண்டதுடன் பிரதி பதிவாளர் எஸ். சிவக்குமார், விரிவுரையாளர்கள் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எச். நபார், பொறியியலாளர், ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம்.முகம்மட் காமில் ஊழியர் சங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தென் கிழக்கு பல்கலைக்ககழகத்தில் தொழில் புரியும் தமிழ் , முஸ்லிம் ,சிங்கள ஊழியர்களுக்குடையில் பரஸ்பரம் , சகோதரத்துவம் , நல்லிணக்கம் போன்றவற்றை கட்டியெழுப்பும் தொனிபொருளில் இந்த தைப்பொங்கல் விழா இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
No comments