பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான நடமாடும் சேவை!!
(வி.ரி.சகாதேவராஜா)
மனித அபிவிருத்தி தாபனம்,காரைதீவு பிரதேச செயலகத்துடன் இணைந்து பாதுகாப்பான புலம்பெயர் தொழில் (வெளிநாட்டு வேலை) தொடர்பான நடமாடும் சேவை காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது
காரைதீவு பிரதேச செயலாளர் ஜி. அருணன் தலைமையில் நடைபெற்ற இந் நடமாடும் சேவைக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏசிஏ. அஸிஸ், கல்முனை சட்ட உதவி ஆணைக்குழு சட்ட உத்தியோகத்தர் வி.ரி.. ஹசினா, காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன், மனித அபிவிருத்தி தாபன உதவி இணைப்பாளர் எம். ஐ. றியால் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அம்பாறை மாவட்ட காரியாலய அதிகாரிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
நடமாடும் சேவைக்கு வருகைதந்த பொதுமக்களுக்கு பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகளும், ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் வழங்கியதுடன் முறைப் பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.
பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான நடமாடும் சேவை!!
Reviewed by Thanoshan
on
1/30/2025 10:42:00 AM
Rating: 5

No comments