காரைதீவு பிரதேச பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
பாறுக் ஷிஹான்
காரைதீவு பிரதேசத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலாளர் நெறிப்படுத்தலின் ஆரம்பமானது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, அஷ்ரப் தாஹிர், க. கோடீஸ்வரன், மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டு தங்களது ஆக்க பூர்வமான கருத்துக்களையும் முன்வைத்தனர்.
இறுதியாக காரைதீவு பிரதேச எல்லைக்குட்பட்ட சிறந்த திட்டங்களை மக்களின் தேவை கருதி பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான ஏ.ஆதம்பாவா பிரதேச செயலாளருக்கும் உரிய திணைக்கள தலைவர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மேலும் சில செயற்திட்டங்களை மக்களுக்காக உரிய அமைச்சுகளூடாக இப்பிரதேசத்திற்கு கொண்டுவருவதாகவும் சபையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments