Vettri

Breaking News

காரைதீவு குடைச்சாமி பீடத்தில் சிறப்பு அமாவாசை பூசைகள் - அற்புதம் கண்டு அடியார்கள் பரவசம்!!




காரைதீவு ஸ்ரீ சிவசக்தி குரு குடைச்சாமி சர்வமத பீடத்தில் நேற்று புதன்கிழமை மதியம் தை அமாவாசை சிறப்பு பூசைகள் இடம்பெற்றன.

அக்கரைப்பற்றை சேர்ந்த அன்பர்களின் பங்களிப்பில் பூசைகள், அன்னதானம் ஆகியன மேற்கொள்ளப்பட்டன.

சர்வமத பீடத்தின் ஸ்தாபகரும், தலைவருமான ஜீவாகர சுவாமிகளின் ஆசிர்வாதம் மற்றும் அறிவுறுத்தல் ஆகியவற்றுக்கு அமைய சிறப்பம்சமாக கடல் தீர்த்தத்தில் பிதிர்களுக்கு படையல் படைக்கப்பட்டது.

அப்போது தொலைதூரத்தில் இருந்து காகம் ஒன்று திடீரென வேகமாக பறந்து வந்து படையலை புசிக்க தொடங்கியது.

இக்காட்சிகள் இஸ்லாமிய சகோதரர் ஒருவரின் கையடக்க தொலைபேசி கமராவில் எதிர்பார்த்து இராத விதமாக பிடிபட்டன.





No comments