Vettri

Breaking News

"அகரம்" முதல் கல்வி அகிலமெல்லாம் வென்றிட வாழ்த்துவதாக மாவடிப்பள்ளி அதிபர் ரஜாப்தீன் தெரிவிப்பு!!!




 - முஹம்மத் மர்ஷாத்-




 கல்முனை வலயம், காரைதீவு கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட மாவடிப்பள்ளி கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டு தரம் ஒன்றிற்கு மாணவர்களை புதிதாக இணைத்துக் கொள்ளும் வித்தியாரம்ப விழா பாடசாலை கேட்போர் கூடத்தில் (30) இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 
பிரதம அதிதியாக ஏ.சஞ்ஜீவன் (கல்முனை கல்வி வலய கணிதப் பாட பிரதிக் கல்வி பணிப்பாளர், காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர்), கௌரவ அதிதியாக ஏ.எல்.எம்.ஜஹான்கீர் (ஆரம்பக் கல்விக்கு பொறுப்பான ஆசிரிய ஆலோசக இணைப்பாளர் கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலயம் மாவடிப்பள்ளி),அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன், விசேட அதிதிகளாக எஸ்.எம்.அஹமெட்லெப்பை (ஓய்வு பெற்ற ஆசிரியர் கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலயம் மாவடிப்பள்ளி), எஸ்.எம்.சுஹுறுடீன் (ஓய்வு பெற்ற ஆசிரியர் கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலயம் மாவடிப்பள்ளி) வருகை தந்தனர்.

இதன் போது கௌரவ அதிதி கருத்து தெரிவிக்கையில் மாணவச்சிட்டுக்களின் கல்விப் பயணத்தினை ஆரம்பித்து வைக்கும் உன்னதமான வித்தியாரம்ப விழா நிகழ்வில் கலந்து கொண்டதற்கு எல்லோருக்கும் நன்றி தெரிவித்ததோடு மாணவர்களின் 'இளமையிற் கல்வி சிலையில் எழுத்து' என்பதற்கு இணங்க ஆரம்பக் கல்வியின் அத்திவாரம் முறையாக இடப்பட்டால் மாத்திரமே பிள்ளையின் சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுத்திட முடியும் என்பதை மனதிற்கொண்டு பிள்ளையின் உடல்,உள வயதிற்கு ஏற்றாற் போல் ஆரம்பக்கல்வி வழங்கப்படுதல் வேண்டும்.கல்வி மூலம் நற்பண்புள்ள பண்புசார் விருத்தியுள்ள பிள்ளைகளை எமது சமூதாயத்தில் உருவாக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறி மாணவர்கள் வரவேற்க்கப்பட்டதோடு,

மேலும் பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில் ஒரு பிள்ளையின் வாழ்நாள் முழுவதுமான கல்விக்கு அத்திவாரமாகவும், அடிப்படையாகவும் அமைவது ஆரம்பக் கல்வியேயாகும். இதனாலேதான் ஆரம்பக்கல்வி இன்றைய உலகில் அதிமுக்கியத்துவம் பெறுகிறது.கல்வி மூலம் நற்பண்புள்ள பண்புசார் விருத்தியுள்ள பிள்ளைகளை எமது சமூதாயத்தில் நாம் உருவாக்க வேண்டும் என கூறினார். மேலும்
பாடசாலைக்கு வருகை தந்த அத்தனை மாணவர்களும் அதிபரினால் வருக வருக என வரவேற்கப்பட்டதோடு,

இந் நிகழ்வில் ஆரம்பக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆரம்பக் கல்விக்கு பொறுப்பான பகுதித் தலைவர், பாடசாலையின் பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆரம்பக் கல்விக்கு பொறுப்பான ஆசிரிய ஆலோசகர், வலயக் கல்விப் பணிப்பாளர்,மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர். இதன் போது மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்ச்சிகளும் சிறப்பாக இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.











No comments