Vettri

Breaking News

மீன்பிடி பூனை(அரிய வகை புலி) இறந்த நிலையில் மீட்பு!!





(பாறுக் ஷிஹான்)

Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் அரிய வகைப் புலியின் உடலம்  இன்று  மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் இறந்த நிலையில்  மீட்கப்பட்டள்ளது.

THE FISHING CAT என அழைக்கப்படும் மீன்பிடி பூனை(அரிய வகை புலி) என அழைக்கப்படுவதுடன்  மக்கள் வாழும் பகுதியில்  இவ்வாறான அரிய வகை புலிகள் காடுகளில் இருந்து    உள் நுழைந்து மீன் உட்பட   கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் இவ்வாறு   சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் மீட்கப்பட்டுள்ள சுமார் 3 அடி நீளமான புலியின் உடலம் விபத்து சம்பவத்தினால் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதா அல்லது யாராவது தாக்கி கொல்லப்பட்டதா என்ற விசாரணைகளை வன  வனஜீவராசி திணைக்களமும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காட்டுப் பூனை என அழைக்கப்படும்  இப்புலியை சுற்றி மல்லிகைப் பூக்கள் தூவப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அண்மைக்காலமாக அப்பகுதியில் உள்ள கோழிகளை வேட்டையாடி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன் இதே போன்று அண்மையில் கோட்டைக்கல்லாற்று பாலம் அருகிலும் புலியின் உடலம் ஒன்றும் மீட்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.

மீன்பிடிப் பூனைகள் சற்று பெரிய பூனைகள் ஆகும். இவை விட்டுப் பூனைகளைவிட இரண்டு மடங்கு பெரியது ஆகும். இது பழுப்பு நிறம் கலந்த சாம்பல் நிறத்தில் உடலும், அதில் கரும் புள்ளிகளும், குறுகிய வாலும் உண்டு. இதன் கன்னத்தில் ஒரு சோடி பட்டைகள் காணப்படும். நெற்றிப் பகுதியில் ஆறுமுதல் எட்டுவரையிலான கருங்கோடுகள் இதன் தனித்த அடையாளம் ஆகும். கருப்பு நிற கோடுகள் மற்றும் புள்ளிகளுடன் கூடிய ஆழமான மஞ்சள்-சாம்பல் நிற ரோமங்களைக் கொண்டிருக்கும்.22 முதல் 31 அங்குலம் வரை வளரக்கூடியது .

பெரும்பாலும் ஈரநிலங்களுக்கு அருகில், ஆறுகள், நீரோடைகள், சதுப்பு நிலங்களில் வாழ்கிறது.அங்கு அது பெரும்பாலும் மீன்கள்,பறவைள், பூச்சிகள், சிறிய விலங்குகள் பாம்புகள் உள்ளிட்ட ஊர்வனங்களை வேட்டையாடக்கூடியது.மீன்பிடி பூனை இரவு நேரங்களில் வெளியில் அதிகமாக நடமாடக் கூடியது. இது நல்ல முறையில் நீந்தி நீருக்கடியில் கூட நீண்ட தூரம் செல்லக்கூடியது.

No comments