இரண்டு நூற்றாண்டுகளாக பெருந்தோட்ட மக்களைக் குறிக்கும் ‘பெருந்தோட்டம்’ என்ற பெயர் மாற்றம்!!
இரண்டு நூற்றாண்டுகளாக பெருந்தோட்ட மக்களைக் குறிக்கும் ‘பெருந்தோட்டம்’ என்ற பெயருக்குப் பதிலாக ‘மலைகம்’ என்ற பெயரைப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
இரத்தினபுரி புனித ஜோகிம் தமிழ் கல்லூரியில் நடைபெற்ற 2025 சப்ரகமுவ மாகாண தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கையின் மலைப் பிரதேசங்களில் தேயிலை பயிரிட வந்த தமிழ் பேசும் மக்கள் பெருந்தோட்ட மக்கள் என அழைக்கப்படுகின்றனர். ஏகாதிபத்தியங்கள் இந்த மக்களுக்கு மிகக் குறைந்த பொது வசதிகளையே வழங்கின.
அவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடன் இணைய விரும்பவில்லை. அவர்களை பெருந்தோட்ட மக்களாக அங்கீகரிக்க வேண்டாம் என்றும் அவர்களை மலையகத் தமிழர்கள் அல்லது மலையகத்தோர் என்றும் அங்கீகரிக்குமாறு பல ஆண்டுகளாக அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வந்தன. அவர்களும் இலங்கைத் தமிழர்களாக அங்கீகரிக்கப்படுவதை ஏற்கவில்லை எனவும் அவர் கூறினார்
No comments