Vettri

Breaking News

அல்-பலாஹ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டியும் மாணவர் விடுகை விழாவும்!!!




 மாளிகைக்காடு செய்தியாளர்


நிந்தவூர் அல் பலாஹ் பாலர் பாடசாலையினால் நடாத்தப்பட்ட வருடாந்த விளையாட்டு போட்டியும் மாணவர் விடுகை விழாவும் நேற்று (27.01.2025) நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழு தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா அவர்கள் கலந்து கொண்டார். மேலும் நிந்தவூர் பிரதேச தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சம்சுன் அலி, சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. நஸீல், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதன்போது மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள், வினோத உடை போட்டி, கலாச்சார நிகழ்வுகள் என்பன நடைபெற்றதுடன் அதிதிகளினால் மாணவர்களுக்கு பரிசுகள், நினைவு சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.







No comments