தொழுநோய் தின நிகழ்வாக சம்மாந்துறையில் விழிப்புணர்வு நிகழ்வும், தோல் நோய் கிளினிக்கும்!!!
நூருல் ஹுதா உமர்
தொழுநோய் தினம் வருடம் தோறும் டிசம்பர் மாதம் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் அனுஸ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஏற்பாடு செய்த விசேட விழிப்புணர்வு நிகழ்வும், தோல் நோய் கிளினிக்கும் வளத்தாப்பிட்டி க்ரேஸ் பாலர் பாடசாலை கட்டிடத்தில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை பிராந்தியத்தில் அதிக தொழுநோயாளர்கள் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இனங்காணப்பட்டுள்ளனர். மாத்திரைகள் உட்கொள்ளும் பட்சத்தில் ஒரு வருடத்தினுள் தொழுநோயை முற்றாக குணமாக்கி விடலாம் என சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம். பஸால், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை தோல் நோய் பிரிவு வைத்தியர் டாக்டர் உனைசியா ஆகியோருடன் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார மாதுக்கள் என பலரும் கலந்து கொண்டு பிரதேச மக்களுக்கு சேவை வழங்கினர்.
No comments